தாய்லாந்தின் கிராபி கிராமப்பகுதியில் உள்ள காட்டுக்குள் உடல் முழுவதும் புழுக்கள், பூச்சிகள் ஊர்ந்த நிலையில் பச்சிளம் பெண் குழந்தையை அப்பகுதிமக்கள் மீட்டுள்ளனர்.
சுமார் 2 நாட்கள் வரையில் குறித்த பச்சிளம் குழந்தை அப்பகுதியில் தாயாரால் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்படாமல் இருந்திருக்கலாம் என்றே கூறப்படுகிறது.
அதன் முகத்தில் சிராய்ப்புகள் காணப்பட்டுள்ளது. மேலும், அதன் உடல் முழுவதும் பூச்சிகள் ஊர்ந்து காணப்பட்டதாகவும், வாழை இலையில் கிடத்தப்பட்ட நிலையில் கிராம மக்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் ஆபத்தான நிலையில் குழந்தை இல்லை என்றே மருத்துவ உதவிக்குழுவினரும் உறுதி செய்தனர். மேலும், குழந்தையை கண்டெடுத்த கிராம மக்கள், மருத்துவ உதவிக்குழுவினர் வரும் வரையில் காத்திருந்துள்ளனர்.
