
தேவையான பொருட்கள்
கருஞ்சீரகம் – 2 ஸ்பூன்
புதினா – ஒரு கைப்பிடியளவு
இஞ்சி – 1 இஞ்ச் அளவு
தேன் – 2 ஸ்பூன்
செய்முறை
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் அரைலிற்றர் தண்ணீர் ஊற்றி சுட வைக்க வேண்டும். சூடு ஏறியதும், அதில் கருஞ்சீரகத்தை போட்டு, நாம் கொதிக்க வைக்க வேண்டும்.
அப்படி கொதிக்கும் நேரத்தில், இஞ்சியைத் தோல் சீவி நன்கு நசுக்கி அதில் போட வேண்டும்.
அதன்பின் அடுப்பை சிறு தீயில் குறைத்துக் கொண்டு, அதில் புதினா இலைகளையும் கொஞ்சம் ஒன்றிரண்டாக நசுக்கியோ கசக்கியோ போட்டு கொதிக்க விட வேண்டும். புதினா போட்டு இரண்டு நிமிடங்களில் அடுப்பை நிறுத்திவிட வேண்டும்.
இதை வடிகட்டி, பின் ஒரு டம்பளர் டீக்கு அரை எலுமிச்சையை பிழிந்து விட்டு அதில் ஒரு ஸ்பூன் தேன் விட்டு கலக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் குடியுங்கள். அதேபோல் மாலையோ இரவிலோ இன்னொரு கிளாஸ் குடிக்க வேண்டும்.
காலையிலேயே மொத்தமாகப் போட்டு வைத்துக் கொண்டு, குடிக்கிற பொழுது மட்டும் எலுமிச்சை மற்றும் தேன் சேர்த்துக் கொள்ளலாம்.
முக்கியமாக இதை சூடாக மட்டும் தான் குடிக்க வேண்டும். அதனால் ஏற்கனவே போட்டு வைத்த டீயை குடிப்பதாக இருந்தால் ஒவ்வொரு முறையும் சூடுபடுத்திக் குடிக்க வேண்டும்.
இந்த எடை குறைக்கும் பானத்தைக் குடிக்கும் காலங்களில் டீ, காபியை எக்காரணத்தைக் கொண்டும் குடிக்கக் கூடாது.