
ஐதராபாத்தை சேர்ந்த சியாமளாஹோலி (வயது 48) என்ற பெண் தலைமன்னார் மற்றும் தனுஷ்கோடி இடையே சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் உள்ள கடல் பகுதியை நீந்துவதற்காக ராமேசுவரம் வந்துள்ளார். வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் ராமேசுவரத்திலிருந்து இலங்கை தலைமன்னார் செல்லவுள்ள இவர் இரவு முழுவதும் படகிலேயே தங்கியிருந்து 19-ந் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி அளவில் தலைமன்னார் கடல் பகுதியில் இருந்து தனது நீச்சல் பயணத்தைத் தொடங்க உள்ளார். மாலை 4 மணிக்குள் அவர் தனுஷ்கோடி கரையை சென்றடைவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.