
உடன் அமுலாகும் வகையில் பாம் எண்ணெய் இறக்குமதிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தடை விதித்துள்ளார்.
ஜனாதியின் செயலாளரினால் இறக்குமதி , ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களத்திற்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று திங்கட்கிழமை இவ்வாறு மரக்கறி எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய ஏற்கனவே இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மரக்கறி எண்ணெய் விநியோகத்தை உடனடியாக நிறுத்தி வைக்க சுங்க திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.