இலங்கை நாவலாசிரியர் ஷெஹான் கருணாதிலக்க, 2022 ஆம் ஆண்டுக்கான புக்கர் பரிசை (The Booker Prize) நேற்று (17) வென்றுள்ளார்.

இலங்கை எழுத்தாளர் ஒருவருக்கு இப்பரிசு வழங்கப்படுவது இதுவே முதல் தடவையாகும்.

லண்டனில் நடந்த வைபவத்தில் பிரித்தானிய ராணி கமீலாவிடமிருந்து இப்பரிசை ஷெஹான் கருணாதிலக்க (Shehan Karunatilaka) பெற்றுக்கொண்டார்.அவர் எழுதிய The Seven Moons of Maali Almeida (த செவன் மூன்ஸ் ஒவ் மாலி அல்மேய்டா) எனும் நாவலுக்காக இப்பரிசு வழங்கப்பட்டுள்ளது. புக்கர் பரிசை வென்ற Seven moons of Mali Almeida, இவரது இரண்டாவது நாவல்.

ஷெஹான் கருணாதிலவுக்கு 50,000 பவுண்ட் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal