
தமது சக்தியைப் பயன்படுத்துவதில் இலஙகை அதிகாரிகள் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது சட்டவிரோதமாக கண்ணீர்ப்புகை மற்றும் நீர்ப்பீரங்கியைப் பயன்படுத்தியதன் விளைவாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்தனர்.
இவ்விடயம் தொடர்பில் சர்வதேச மன்னிப்புச் சபையின் பிராந்திய ஆராய்ச்சியாளர் ஹரீந்தினி ஹொரையா இக் கோரிக்கையை முன்வைத்துள்ளதுடன் நாட்டில் பல மாதங்களாக இவ்வாறான எதிர்ப்பு நிலை உள்ளபோதும் பொலிசார் தமது கடமையில் கவனயீனம் காட்டுவது வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.