
இலங்கையில் மூன்று பேருக்கு ஒருவர் சோம்பேறியாக உள்ளதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கணினி வேலை, தொலைக்காட்சி பாவனை, கைத்தொலைபேசிக்கு அடிமையானமை போன்ற காரணங்களால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தொற்று சுகாதார இயக்குநரகத்தின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஷெரின் பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக தொற்றா நோய்களான.இதயநோய், சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ள அவர் உடற்பயிற்சி செய்வதை ஊக்குவிப்பதன் மூலம் இந்த நோய்களைத் தடுக்க முடியும் எனவும் கூறியுள்ளார்.
இதன் காரணமாக ஏப்ரல் மாதத்தை செயலில் உள்ள மாதமாக பிரகடனப்படுத்தி நிறுவன மட்டத்தில் விளையாட்டு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.