இலங்கையில் இருந்து இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்புவதாக கூறி மனித கடத்தல் நடைபெறுவதாக அந்நாட்டில் உள்ள இலங்கை அமைப்புகள் குற்றம் சுமத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி இஸ்ரேலில் துப்புரவு பணிக்கு விசா தருவதாக கூறி இலங்கையர்களிடம் சுமார் 28 லட்சத்தை பெறுவதாக அவர்கள் கூறுகின்றனர். ஆனால் இலங்கையர்கள் எந்த சூழ்நிலையிலும் துப்புரவு தொழிலாளர்களாக இஸ்ரேலுக்குள் பிரவேசிக்க முடியாது என கூறப்படுகின்றது.

அத்துடன் , இந்த கடத்தலின் பின்னணியில் பணியகத்தின் தலைவர்கள் இருப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்

மோசடியில் ஈடுபட்டவர்கள் சாக்கு மூட்டைகளில் பணத்தை எடுத்துச் செல்வதாகவும், இதன் பின்னணியில் இரண்டு அமைச்சர்கள் இருப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இணைய ஊடகமொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இதனை கூறியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal