
கொரோனா பரவல் நிலைமை தொடர்பாக யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குள் பிரவேசிப்பவர்கள் தொடர்பாக வடக்கு மக்கள் அவதானமாக இருக்குமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஆழ்கடல் மீனவர்களுக்கும் மீன்பிடி சமூகத்தினருக்கும் கரையோரப் பகுதியில் மக்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதுடன் கண்காணிப்பு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்நிலையில், இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தவிர்த்து எமது மாவட்டத்தினை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க உதவ வேண்டும்” என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.