
இராணுவம் ஆட்சி செய்யும் நாடுகள் உலகில் எந்த இடத்திலும் முன்னேற்றமடையவில்லை என கைத்தொழில் அமைச்சின் செயலாளரும் முன்னாள் இராணுவ தளபதியுமான ஜெனரல் தயா ரத்நாயக்க (Daya Ratnayake) தெரிவித்துள்ளார்.
படையினரை முன்னோடிகளாக மாற்றும் எந்த சமூகமும் எப்போதும் முன்னேறியதில்லை எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கல்வி கற்ற நிபுணர்களே நாட்டின் முன்னோடிகளாக இருக்க வேண்டும். இதற்கு பதிலாக படையினர் நாட்டின் முன்னோடிகளாக மாறினால், அப்படியான சமூகத்திற்கு முன்னேற்றம் இருக்காது எனவும் தயா ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.