
பொதுமக்கள் அத்தியாவசியப்பொருட்களை கொள்வனவு செய்து வைத்திருக்குமாறும் அதிகளவு நோயாளர்கள் கண்டுபிடிக்கப்படும்பகுதிகள் முடக்கப்படலாம் எனவும் , இராணுவதளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.
எனினும் எதிர்வரும் நாட்களில் கண்டுபிடிக்கப்படவுள்ள நோயாளிகளின் எண்ணிக்கையே இதனை தீர்மானிக்கும் எனவும் இராணுவதளபதி கூறியுள்ளார்.
நாங்கள் மக்களை மிரட்டவேண்டிய அவசியமோ அல்லது உண்மையை மறைக்கவேண்டிய தேவையோ இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் சிகிச்சை நிலையங்களை அதிகரிக்க இராணுவம் தயாராகவுள்ளதாகவும் சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.