
மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை ஆயராக பிரகடனப்படுத்தப்பட்டு 13வது ஆண்டு நிறைவினை முன்னிட்டும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் இரத்தப்பற்றாக்குறையினை பூர்த்திசெய்யும் வகையிலும் இந்த இரத்ததான முகாம் மட்டக்களப்பு கறுவப்பங்கேணி புனித வனத்து அந்தோனியார் ஆலயத்தில் நேற்று(புதன்கிழமை) இரத்ததான முகாம் ஒன்று நடாத்தப்பட்டது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையுடன் இணைந்து புனிதவனத்து அந்தோனியார் ஆலய கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த இரத்ததானமுகாம் நடாத்தப்பட்டது.
அண்மைக்காலமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இரத்தப்பற்றாக்குறை நிலவிவருவதாக பல்வேறு தரப்பாலும் சுட்டிக்காட்டப்பட்டது.