மேஷம்:

குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம்

வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும்.

உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.

ரிஷபம்

எதிர்ப்புகள் அடங்கும்‌. பால்ய நண்பர்கள் உதவுவார்கள். புதுவேலை கிடைக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி

செய்வீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின்

பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமையை கிடைக்கும். நன்மை கிடைக்கும் நாள்.

மிதுனம்

குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். பிரபலங்களின் நட்பு

கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். உறவினர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு

லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். துணிச்சலுடன் செயல்படும் நாள்.

கடகம்

கணவன்-மனைவி அன்யோன்யம் பிறக்கும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். தோற்றப் பொலிவுக் கூடும்.

விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். புதிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும்.

உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.

சிம்மம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் தேவையற்ற விஷயங்களை மனதில் நினைத்து குழம்பிக் கொண்டிருக்காதீர்கள்.

குடும்பத்தில் சலசலப்பு வந்து நீங்கும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை

பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்சினை வந்து நீங்கும். கவனம் தேவைப்படும்

நாள்.

கன்னி

கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். உறவினர்களால்

சங்கடங்கள் வரும். லேசாக தலை வலிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும்.

உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

துலாம்

உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீட்டை புதுப்பிக்க

திட்டமிடுவீர்கள். பயணங்களால் பயனடைவீர்கள். புது பொருள் வந்து சேரும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும்

முயற்சி வெற்றி. உத்தியோகத்தில் வைத்து உங்கள் கை ஓங்கும். திட்டங்கள் நிறைவேறும் நாள்.

விருச்சிகம்

எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலைக்கு தகுந்தார் போல் பொறுப்பாக

இருப்பார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள்

பாராட்டுவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

தனுசு

குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். உறவினர்களிடம்

எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீடு வாகனத்தைசீர் செய்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக்

கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். புதிய பாதை தெரியும் நாள்.

மகரம்

சந்திராஷ்டமம் இருப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து போகும். உறவினர் நண்பர்களை பகைத்துக்

கொள்ளாதீர்கள். நன்றி மறந்தவர்களை நினைத்து வருத்தப்படுவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம்

ஏற்படும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

கும்பம்

தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விரும்பிய

பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தாயார் ஆதரித்து பேசுவார். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு.

உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.

மீனம்

பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். சிலர் உங்கள்

உதவியை நாடுவார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.

உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்தும் தருவார்கள். அமோகமான நாள்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal