மின் உற்பத்தி நிலையங்களுக்கு கனியவள கூட்டுத்தாபனம் உராய்வு எண்ணெய்யை வழங்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
கனியவள கூட்டுத்தாபனம் 5,000 மெட்ரிக் டன் உராய்வு எண்ணெய்யை இன்று வழங்கவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.
சப்புகஸ்கந்த மற்றும் துறைமுகம் என்பனவற்றில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்கு இந்த உராய்வு எண்ணெய் வழங்கப்பட உள்ளதாக இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் மின்சார விநியோகத்தடை ஏற்படுமா என்பதை, மாலை வேளையில் அறியப்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கனியவள கூட்டுத்தாபனத்தினால், இலங்கை மின்சார சபைக்கு, உராய்வு எண்ணெய் வழங்கப்படாமை காரணமாக, நாட்டின் பல பாகங்களில் நேற்றிரவு(07) மின்சார விநியோகத்தடையை ஏற்படுத்த மின்சார சபை நடவடிக்கை எடுத்திருந்தது.
நேற்று மாலை 5.30 முதல் இரவு 9.30 வரையிலான காலப்பகுதியில், ஒரு மணிநேரம் இவ்வாறு மின்சார விநியோகம் தடைப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.