
அவுஸ்ரேரேலியா முழுவதும் கொரோனா தொற்று காரணமாக மேலும் 45 பேர் மரணங்கள் இடம்பெற்றுள்ளன.அவுஸ்ரேரேலியா மாநிலங்களான NSW, விக்டோரியா, டஸ்மேனியா, மேற்கு அவுஸ்ரேரேலியா , தெற்கு அவுஸ்ரேரேலியா , ACT மற்றும் குயின்ஸ்லாந்தில் கொரோனா தொடர்பிலான மேலும் 45 இறப்புகள் பதிவாகியுள்ளன.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மேலும் 17,856 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 21 பேர் மரணமடைந்தனர். 1,582 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 71 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.