
தேசிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்தை தடுப்பதற்கு காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பில் 24 மணித்தியாலங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலங்கை காவல்துறை மா அதிபரிடம் மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றைக் கோரியுள்ளது.
கொம்பனித்தெரு – காவல்துறை பிரிவுக்குட்பட்ட யூனியன் பிளேஸ் பகுதியிலேயே குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதாகவும் இப்பகுதி நீதிமன்ற தடை உத்தரவுப்பகுதி அல்ல எனவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் அறிக்கை கிடைக்கப்பெற்றதும் மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.