
அம்பாறை மாவட்டம், ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த அரபுக் கல்லூரி மௌலவியும், பாடசாலை ஆசிரியர் ஒருவரும் அடிப்படைவாதத்தைப் போதித்ததாக பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (புதன்கிழமை) இவர்கள்கைதுசெய்யப்பட்டதுடன் விசாரணைக்காக கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதப் புலனாய்வுத் தடுப்புப் பிரிவினர், முஸ்லிம் அடிப்படைவாத போதனை மற்றும் தீவிரவாதச் செயற்பாடு தொடர்பாக மேற்கொண்டு வந்த விசாரணையின் ஒரு கட்ட மாகவே இவர்கள் கைதாகியுள்ளனர்.
இதன்படி, கடந்த 2018ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை முடித்த மாணவர்களுக்கு முஸ்லிம் அடிப்படைவாத போதனை மற்றும் தீவிரவாத செயற்பாட்டிற்கான பயிற்சியளிப்பதற்கு உதவிய குற்றச்சாட்டின் அடிப்படையில் 39 வயதுடைய குறித்த அரபுக் கல்லூரி மௌலவி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அதேபோல், தென்கிழக்குப் பல்கலைக்கழக வீதி, ஒலுவில் முதலாம் பிரிவைச் சேர்ந்த 30 வயதுடைய முஸ்லிம் பாடசாலையில் கல்வி கற்பித்துவரும் ஆசிரியர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
விசாரணைகளை பயங்கரவாதப் புலனாய்வுத் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டுவருவதாக அவர் கூறியுள்ளார்.