
அலுவலகம் ஒன்றில் கடுமையான கோபத்திலிருந்த அந்த முதலாளி அவரது ஊழியர்களிடம் கத்திக்கொண்டிருந்தார்.
‘நீங்கள் யாரும் இங்கு முதலாளி இல்லை. நான்தான் முதலாளி. நீங்களெல்லாரும் வெறும் பூஜ்யம்தான், புரிகிறதா?
இப்போது சொல்லுங்கள், நீங்கள் யார்?’ என்றார்.
ஊழியர்கள் அமைதியாக, “பூஜ்யம்” என்று பதில் அளித்தனர்.
‘அப்படியானால் நான் யார்?’ என்று முதலாளி அடுத்த கேள்வியைக் கேட்டார்.
ஊழியர்கள் அமைதியாக, ‘பூஜ்யத்தின் முதலாளி’ என்றனர்.
அசடு வழிந்தபடி நின்றார் முதலாளி.