Description
வெள்ளி இடைநகர்வு 2012 – ஓர் அபூர்வ வான் நிகழ்வு
வெள்ளிக் கோளானது சூரிய தட்டின் வழியே ஒரு புள்ளி போன்று நகர்ந்து செல்வதையே வெள்ளி இடைநகர்தல் (Transit of Venus) என்கிறோம்.
2012ம் ஆண்டு ஜூன் 6ம் தேதி ‘வெள்ளி இடைநகர்வு” உலகம் முழுவதிலும் பொதுமக்கள் பலரால் பார்கப்பட்டது. இந்நிகழ்வை தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆயிரக்கணக்கான மாணவர்களையும் மக்களையும் காணச்செய்தது. இதன்பிறகு டிசம்பர் 2117ல்தான் நிகழும். எனவே தற்போதுள்ள தலைமுறையினர் யாரும் ஜூன் 6 2012 நிகழ்விற்குப்பின் இதைக் காணமுடியாது. எனவேதான் இது ஓர் அரிய நிகழ்வாகிறது.
இந்நிகழ்வில் அப்படியென்ன முக்கியத்துவம் உள்ளது என்ற கேள்வி பலருக்கு எழலாம்.. இந்நிகழ்வின் மூலமே நமக்கும் சூரியனுக்கும் உள்ள தொலைவு எத்தனை தூரம் என கணக்கிடப்பட்டது.
இந்நிகழ்வு குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வெளியிட்டுள்ள படக்கதை புத்தகம் இது.
மூலம் : http://mutha.ncra.tifr.res.in/ncra/for-public/transit-of-venus
Reviews
There are no reviews yet.