Description
ஏற்காடு இளங்கோ
மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com
உருவாக்கம்: ஏற்காடு இளங்கோ
மின்னஞ்சல்: yercaudelango@gmail.com
வெளியீடு – http://freetamilebooks.com
ஒருங்குறி மாற்றம்: மு.சிவலிங்கம்
மின்னஞ்சல்: musivalingam@gmail.com
மேலட்டை உருவாக்கம்: லெனின் குருசாமி
மின்னஞ்சல்: guruleninn@gmail.com
மின்னூலாக்கம் : த.சீனிவாசன்
மின்னஞ்சல் : tshrinivasan@gmail.com
உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
என்னுரை
மானிடவியல், தொல் பொருளியல், உயிரியல், தாவரவியல் என பலதுறைகளை சார்ந்த விஞ்ஞானிகளுக்கு ஆய்வு செய்வதற்காக ஒரு இயற்கையால் பதப்படுத்தப்பட்ட மம்மி ஒன்று கிடைத்தது. அந்த மம்மியை கடந்த 25 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வந்தனர்.
இந்த மம்மியின் உடல் என்பது சுமார் 5300 ஆண்டுகள் பழமையானது. இதுவே உலகில் மிகவும் பழமையான மம்மி. இந்த மம்மியின் இரத்த வகையைகயும் கண்டுபிடித்துள்ளனர். அது மிகப்பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுதவிர அவன் பயன்படுத்திய கருவிகளும், உடையும், கிடைத்துள்ளது. அதன் மூலம் அவன் வாழ்ந்த காலக்கட்டத்தில் மனிதர்கள் எப்படிப்பட்ட வாழ்க்கை முறையை பின்பற்றினர் என்பதையும் தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகிலேயே அதிகமான ஆய்வாளர்களால் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட மம்மி என்ற பெருமை இந்த ஓட்சிக்கு உண்டு. ஓட்சி எனப்படும் பனிமனிதனை பற்றிய தகவல்களை இப்புத்தகத்தின் வாயிலாகத் தெரிந்து கொள்ளலாம்.
இப்புத்தகத்தை எழுதுவதற்கு எனக்கு ஒத்துழைப்பு கொடுத்த என் மனைவி திருமிகு. E. தில்லைக்கரசி அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் புத்தகத்தைச் செழுமைப்படுத்திக் கொடுத்த ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு. S.நமசிவாயம் அவர்களுக்கும், தட்டச்சு செய்துகொடுத்த திருமிகு. ம. இலட்சுமிதிருவேங்கடம் அவர்களுக்கும் எனது நன்றி. இந்தப் புத்தகத்தை வெளியிட்ட freetamilebooks.com -மிற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்த்துகளுடன்
– ஏற்காடு இளங்கோ
Reviews
There are no reviews yet.