
கடந்த பெப்ரவரி 3ம் திகதி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி பொத்துவிலில் ஆரம்பிக்கப்பட்டு கடந்த பெப்ரவரி ஏழாம் திகதி பொலிகண்டியில் நிறைவுபெற்றது. இப்பேரணியில் கலந்துகொண்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனிடம் மன்னார் பொலிஸார் வாக்குமூலம் பதிவுசெய்துள்ளனர். ஏற்கனவே கிளிநொச்சி பொலிசார் வாக்குமூலம் பெற்றிருந்த நிலையில் தற்போது மீண்டும் மன்னார் பொலிசாரினால் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.