×

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை இனப்படுகொலை தினமாக முதலமைச்சர் விஜய் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என விடுதலைகள் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஆதரவுடன் வன்னியரசு வலியுறுத்தியுள்ளார்.

நேற்று சட்டசபையில் பேசும் பொழுது தமிழக முதல்வர் விஜய் முன்னிலையில், சட்டசபையில் மேற்கண்டவாறு கோரிக்கை முன் வைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஐபிசி தமிழ் தொலைக்காட்சிக்கு வழங்கிய களம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் பொழுதும் தற்போதைய நிலவரம் எப்படி இருக்கிறது என்பதை விளக்கமாக கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இனப்படுகொலையை உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்களுக்கு கொண்டு சேர்க்கும் கடமை இருக்கிறது. எதிர்வரும் 18ஆம் திகதியை இனவழிப்பு தினமாக அறிவிக்குமாறு கட்சி சார்பில் நான் தமிழக சட்டசபையில் கோரிக்கை முன்வைத்துள்ளேன்.

அதனை தமிழக முதல்வர் விஜய் காதுக் கொடுத்து கேட்கும் வகையில் உள்ளார். இனப் படுகொலை நடந்த சமயத்தில் இலங்கையில் நான் இருந்தேன். அதன் பின்னரே படகு மூலம் இந்தியாவுக்கு சென்றேன். இதனால் இலங்கை தமிழர்களின் வலிகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது என்றார்.

×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115