வடக்கு, கிழக்கு பகுதிகளில் இன்றய தினம்(18.05.2026) முள்ளிவாய்க்கால் நினைவு நாள் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இதற்கமைய, மதுபான சாலைகள் உட்பட வர்த்தக நிலையங்களை மூடி நிறைவேந்தல் நிகழ்வினை சிறப்புற நிகழ்த்துவதற்கு ஒத்தாசை வழங்குமாறு கிளிநொச்சி மாவட்ட வர்த்தக சங்கத்தினர் அரைகூவல் விடுத்துள்ளனர்.
மேலும் தெரிவிக்கையில்,
குறிப்பாக மதுபான சாலைகள் அனைத்தும் பூட்டப்பட்டிருக்க வேண்டும் என வர்த்தக சங்கத்தினர் வாயிலாகவும் கிளிநொச்சி மாவட்டத்தினர் சார்பாகவும் கேட்டுக் கொள்கின்றோம்.
அத்துடன், வடக்கு கிழக்கில் அனைத்து வர்த்தகர்களும் பூரண ஆதரவை வழங்க வேண்டும். கடந்த 2009 ஆம் ஆண்டு இதே போன்ற ஒரு நாளில் வழியை சுமந்து அந்த மக்களுக்கான ஒரு ஆதரவை தெரிவிக்க வேண்டும்.
17 ஆண்டுகள் கடந்து எமது உறவுகளை நினைவு கூறுவதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.