×

நடைபெற்று முடிந்த    கல்வி பொதுத்தராதர சாதார பரீட்சை பெருபேறுகள் உத்தியோகப்பூர்வமாக வெளியாகியுள்ளன இதடி அடிப்படையில் வடக்கு மாகாணத்திலிருந்து இப்பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 70.1% மானோர் கல்வி பொதுத்தராதர உயர்தர பிரிவில் கற்பதற்கான தகுதியை பெற்றுள்ளார்கள். இம்முறை வெளியான பெறுபேரருகளின் படி வடக்கு மாகாணத்தில் 566 மாணவர்கள் ஒன்பது பாடங்களில் ஏ சித்தியை பெற்றுள்ளார்கள். அத்துடன் அகில இலங்கை ரீதியாக மாகாண மாவட்ட அடைவு நிலைகளில் அடிப்படையில் இம்முறை வடக்கு மாகாணம் தேசிய மட்டத்தில் எட்டாம் இடத்தை பெற்று முன்னேற்றம் அடைந்துள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற கல்வி பொதுத்தராதர சாதார  பரீட்சை பெருபேறுகளின் அடிப்படையில் வடக்கு மாகாணம் 87% தேர்ச்சியுடன் தேசிய மட்டத்தில் ஒன்பதாம் இடத்தை பெற்றிருந்தது. கடந்த ஆண்டு தரவுகளுடன் ஒப்பிடுகையில் இம்முறை மாணவர்களின் உயர்தரத்துக்கான தேர்ச்சி வீதத்திலும் தேசியமட்ட தெரிவு செயலிளும் வடக்கு மாகாணம் குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இப்பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 627 பேர் அனைத்து பாடங்களிலும் சித்தி அடைய தவறியுள்ளார்கள்.

×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115