×

முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம்' என தமிழக முதல்வர் விஜய் தன்னுடைய ஆதரவை இலங்கை மக்களுக்காக வழங்கியுள்ளார். 

இது தொடர்பில் அவருடைய எக்ஸ் தளத்தில் பதிவொன்றையும் பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில்,

முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம்.. கடல் கடந்து வாழும் நம் தமிழ்ச் சொந்தங்களின் உரிமைகளுக்காக எப்போதும் துணை நிற்போம்! என குறிப்பிடப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவு நாள் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதனை முன்னிட்டு, வடக்கு கிழக்கில் பல இடங்களில் முள்ளிவாய்க்கால் படுகொலையின் போது உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டதினை தொடர்ந்து முள்ளிவாய்க்காலினை நினைவுகூரும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கப்பட்டுள்ளது.

17 வருட போராட்டத்திற்கான நீதியை பெற்று தருமாறு கோரி பல தலைவர்கள் மற்றும் தென்னிந்திய பிரபலங்கள் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

அதே போன்று, இன்றைய தினம் தமிழர்களுக்கான இன அழிப்பு நாளாக அறிவிக்குமாறு பல கடிதங்கள் மற்றும் கோரிக்கைகள் விஜய்க்கு அனுப்பட்டன.

இந்நிலையில், இன்றைய தினம் கடல் கடந்து வாழும் உறவுக்காக துணை நிற்போம் என தன்னுடைய ஆதரவை விஜய் வெளிப்படுத்தியுள்ளார்.

×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115