×

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நான் விலகும் போது, எனக்கு பதிலாக சட்டத்தரணி கௌசல்யா நரேந்திரன் பதவியேற்பார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,  

நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் வரும் விருந்தினர்களை வைத்திருக்க வேண்டிய இடம் தொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டியவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

எனது வலதுபக்கத்தில் அமர்ந்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள், என்னுடன் வருகைத் தந்த தங்கை சட்டத்தரணி கௌசல்யா நரேந்திரனை கேவலமான முறையில் அவமதித்துச் சென்றிருக்கின்றார்.

அடுத்த மூன்று மாதங்களின் பின்னர் நான் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகும்போது, எனக்கு அடுத்து கௌசல்யா நாடாளுமன்ற உறுப்பினராக வரப் போகின்றார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை விட அதிக்கூடிய வாக்குகளைப் பெற்றவர் சட்டத்தரணி கௌசல்யா. அவரை, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் இன்று வாசிக சாலையில் வைத்து மிகவும் மோசமான முறையில் அவமதித்துச் சென்றிருக்கின்றார் என குறிப்பிட்டுள்ளார்.  

×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115