×

ஈரானின் உயர் செறிவூட்டப்பட்ட யுரேனியக் கையிருப்பை வெளிநாடுகளுக்கு அனுப்பக் கூடாது என்று அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா மொஜ்தபா கமேனி (Ayatollah Mojtaba Khamenei) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அமைதிப் பேச்சுவார்த்தையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கைகளில் ஒன்றை இந்த உத்தரவு நேரடியாகப் பாதித்துள்ளதால், பேச்சுவார்த்தைகளில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் நிலவி வரும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமாயின், ஈரான் தனது அணு ஆயுதத் தயாரிப்பிற்குத் தேவையான உயர் செறிவூட்டப்பட்ட யுரேனியக் கையிருப்பை முழுமையாக நாட்டிற்கு வெளியிலே அனுப்ப வேண்டும் என டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். அத்துடன், ஈரான் தனது பாலிஸ்டிக் ஏவுகணைத் திறன்களை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்றும், அதன் ஆதரவுப் படைகளுக்கான உதவிகளை நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலிறுத்தியுள்ளார்.

இந்நிலையில், ஈரானின் யுரேனியப் பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பினால், அது எதிர்காலத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு ஈரானை மேலும் பலவீனமாக்கிவிடும் என்று ஈரானின் உயர்மட்ட அதிகாரிகள் கருதுகின்றனர்.

இவ்வாறானதொரு பின்னணியில், ஈரானின் உயர் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பக் கூடாது உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி உத்தரவிட்டுள்ளமை சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115