×
ஈரானை முழுமையாக அழிக்க இராணுவத்திற்கு உத்தரவு!

ஈரான் நாட்டின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு ஊர்வலத்தின் போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை கொலை செய்யக் கோரி பகிரங்கமாக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதனை தொடர்ந்து, ஈரானுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் அச்சுறுத்தல் விடுத்துள்ளார். தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அமெரிக்க ஜனாதிபதியைக் கொலை செய்ய ஈரான் அரசு ஏதேனும் முயற்சி மேற்கொண்டால், உடனடியாக ஈரான் மீது தாக்குதல் நடத்த 1000 ஏவுகணைகள் தயார் நிலையில் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஒரு வருட காலத்திற்குள் ஈரானை முழுமையாக அழிக்க அமெரிக்க இராணுவத்திற்கு ஏற்கனவே உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் எச்சரித்துள்ளார். அண்மையில் ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் கத்தார் மற்றும் சவூதி அரேபிய எண்ணெய் டாங்க் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களும், அதற்குப் பதிலடியாக அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களும் பிராந்தியத்தில் கடுமையான பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த மோதல்களால் இரு நாடுகளுக்கும் இடையிலான தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார். இருப்பினும், அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடர ஈரான் விடுத்த கோரிக்கையை அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி ட்ரம்ப், பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தாலும் போர்நிறுத்தம் என்பது இனி கிடையாது என்பதைத் திட்டவட்டமாக விளக்கியுள்ளார்.

×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115