×

இலஞ்ச ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு தனக்கு அறிவிக்கப்பட்ட திகதியில் முன்னிலையாவேன் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மறைந்த முன்னாள் சி.டி.ஏ. கபில சந்திரசேனவுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக, சனிக்கிழமை  காலை (10) கொழும்பில் உள்ள ஒரு தனியார் இறுதிச்சடங்கு கூடத்திற்குச் சென்றபோது, ஊடகங்களிடம் பேசிய முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

 நாளை (12) இலஞ்ச ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்புக் கடிதம் நேற்று (09) பெறப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி தரப்பு தெரிவித்துள்ளது. 

×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115