×

 இறுதி யுத்தத்தின் போது இலங்கை அரசு கொழும்பு மற்றும் காலியில் அமைந்திருந்த இரு களஞ்சியங்கள் ஊடாக சீனா ஆயுதங்களை வழங்கியமை தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி அட்பரல் ஜெகன்னாத் கொலம்பேகை சர்வதேச பொறுமுறை ஊடாக விசாரணை செய்ய வேண்டும் என தவித் திருவேலன் சுவாமிகள் கோரிக்கை முன்வைத்துள்ளார். நேற்று செம்மணி மனித புதைகுழி நீதி கேட்டு இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் திட்டமிடப்பட்டு கொலை செய்யப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளார்கள். இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட கிளாஸ்டர் மற்றும் புஸ்பரஸ் குண்டுகள் எங்கிருந்து பெறப்பட்டது? யார் அதை வழங்கி இருப்பார்கள் என்பது தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி சர்வதேச ரீதியாக விசாரணை செய்ய வேண்டும். செம்மணி  புதைகுளி கோடுகள் சுமார் 380 தாண்டியுள்ள நிலையில் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு செம்மணி ஆதாரமாக இருக்கிறது. அதேபோன்று முள்ளிவாய்க்காலிலும் தமிழ் மக்கள் கொத்து கொத்தாக அளிக்கப்பட்டார்கள். அது தொடர்பிலும் சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115