×

இலங்கை அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பதற்காக புதிய ஆணைக்குழுவொன்றினை நியமித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 

சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான சிக்கல்கள் தொடர்பில் ஆராயும் வகையில் 15  உறுப்பினர்களைக் கொண்ட குறித்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. தெல்கே அசோக பீரிஸ் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இந்த குழுவின் ஊடாக, அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான தற்போதைய சிக்கல்களுக்குத் தீர்வு காண்பது, அரசுப் பணியாளர்களின் தொழில்முறையை மேம்படுத்துவது, உலகளாவிய போக்குகளுக்கு ஏற்ப  பொதுச் சேவையை எவ்வாறு கட்டமைப்பு ரீதியாக சீர்திருத்துவது போன்ற பரிந்துரைகள் பெறப்படும்.  இலங்கை அரசியலமைப்பின் 33ஆவது பிரிவின்படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க இந்த  குழு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115