இந்தியாவின் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தின் திறப்பு விழாவிற்கு சென்ற அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் பௌத்த தேரர்கள் அடங்கிய குழுவினர் இன்று குஷிநகரில் பிரபல வணக்கஸ்தாலமான புத்தபெருமானின் பரிநிர்வாண கோயிலுக்கு சென்றுவழிபாடு செய்துள்ளனர்.
கௌதம புத்தர் தமது 80 வது அகவையில் படுத்த கோலத்தில் பரிநிர்வாணம் அடைந்தார். அங்கு புத்தபெருமானின் பரிநிர்வானக் காட்சியை சிற்பமாக செதுக்கி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் Ramabhar Stupa இடத்திற்கும் சென்றனர் .

இங்கு புத்தரை எரியூட்டிய தூபியாகும். புத்தர் உயிருடன் இருந்தபோது குஷிநகரை ஆண்ட மல்லா அரசர்களால் (Malla Kings) இந்த ஸ்தூபி கட்டப்பட்டது. பண்டைய பௌத்த நூல்களில், இந்த ஸ்தூபி முகுத்-பந்தன் சைத்யா அல்லது முக்தா-பந்தன் விஹார என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
புராணங்களின் படி, ராமபார் Ramabhar என்ற சொல் குளத்திலிருந்தோ அல்லது அதற்கு அருகில் அமைந்துள்ள மேட்டிலிருந்தோ பெறப்பட்டிருக்கலாம்என கூறப்படுகின்றது. புத்த பெருமானின் அந்த ஸ்தூபி செங்கற்களால் ஆனது மற்றும் 14.9 மீ உயரம் கொண்டது.

இந்த ஸ்தூபி குஷிநகர்-தியோரியா வீதிக்கு எதிரே உள்ள ஒரு மேட்டின் மீது கட்டப்பட்டுள்ளது. இந்த ஸ்தூயின் வட்ட சுற்று மேல் 34.14 மீ விட்டம் மற்றும் கீழே 47.24 மீ. அதன் அருகில் ஒரு குளம் போன்ற நீர்நிலை உள்ளது.
மேலும் குக்ஷிநகரம் அனைத்துலக பௌத்தர்களின் புனித தலமாக விளங்கிவரும் நிலையில், அங்கு பௌத்தர்கள் மட்டுமல்லாது பலரும் சுற்றுலாவாக சென்று வருகின்றனர்.





