இலங்கையில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருகின்ற நிலையில் இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த அரசாங்கம் ஒரு மாத சம்பளத்தை அமைச்சர்களிடம் கோரியுள்ளது.
இந்நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழர் ஒருவர் ‘இடுகம’ கொரோனா சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு 10 மில்லியன் ரூபாவை அன்பளிப்பு செய்துள்ளார்.
கொரோனா பரவல் கட்டுப்பாட்டு செயலணியின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, (Shavendra silva) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் (Gotabaya Rarajapaksa) இதற்கான காசோலையை வழங்கினார்.

இது குறித்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.