சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபரும் முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹணவுக்கு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

இந்நிலையில் அவர் நேற்றைய தினம் மாலை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டிருந்தார். எனினும் அவரது நிலை மோசமானதாக இல்லையென தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர் சாதாரண வார்ட் அறைக்கு மாற்றப்பட்டிருப்பதாக தகவல் கூறுகின்றது.
இதேவேளை குற்றத் தடுப்பு மற்றும் போக்குவரத்து பிரிவுக்குப் பொறுப்பான, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.