வாகன அபராதத்தை மின்னணு முறையில் செலுத்துதல் மற்றும் ஓட்டுனர்களுக்கான புள்ளிகளை வழங்கும் முறையை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
புள்ளிகள் வழங்கும் முறையை செயல்படுத்த சட்டங்கள் மற்றும் தரவு அமைப்புகள் இருக்கின்ற போதிலும் அதற்காக உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை , வீதிகளில் யாசகம் எடுப்பதை தடுத்து நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.