
வெல்லாவெளி பிராமிச் சாசனங்கள் எனப்படுபவை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வெல்லாவெளி பிரதேசத்திலுள்ள உள்ள தளவாய் எனும் பகுதியிலுள்ள குன்றில் காணப்படும் பிராமி எழுத்துக்கள் ஆகும்.
மட்டக்களப்பு நகரிலிருந்து களுவாஞ்சிக்குடி (ஏ-4 நெடுஞ்சாலை) ஊடாக இப்பிரதேசத்தை அடைய கிட்டத்தட்ட 50 கி.மீ. தூரம் பயணிக்க வேண்டும். குன்றுகளும் பாறைகளும் நிறைந்த இடத்தில் பிராமிச் சாசனங்கள் காணப்படுகின்றன.
இவற்றில் காணப்படும் கிட்டத்தட்ட நான்கு சாசனங்களில் மூன்றில் உள்ள எழுத்துக்கள் சிதைவடைந்து காணப்பட ஒன்றில் தெளிவாகவுள்ளது. இங்குள்ள குன்றுகள் மனித செயற்பாடுகளினால் செதுக்கப்பட்டு அல்லது வடிவமைக்கப்பட்டுக் காணப்படுகின்றன.
இச்சாசனங்களின் காலம் 2200 வருடங்கள் (கி.மு. இரண்டாம் நூற்றாண்டு) பழமையானவை என்ற கருத்து நிலவுகின்றது. இவை பிராமி-பிராகிருத கலப்பு என்ற கருத்தும் நிலவுகின்றது.