
கம்பஹா – மஹர சிறைச்சாலையில் கைதிகள் பலரும் தற்போது உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். துமிந்த சில்வாவுக்கு, ஜனாதிபதி கோட்டாபய பொதுமன்னிப்பு அளித்ததுபோல தங்களையும் விடுதலை செய்யுமாறு கோரியே அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் பொதுமன்னிப்பு இல்லாவிட்டால் தங்களுக்கு தூக்குத்தண்டனை வழங்கும்படி அவர்கள் கோரிவருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.