
நாட்டில் எரிபொருட்களின் விலை உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை மையமாகக்கொண்டு நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை முன்வைப்பதற்கு பிரதான எதிர்க்கட்சி உத்தேசித்துள்ளது.
நேற்றிரவும் இன்று காலையும் நடைபெற்ற கட்சியின் உள்ளக கலந்துரையாடல்களில் இவ்விவகாரம் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த பிரேரணை துறைசார் அமைச்சருக்கு எதிராகவா அல்லது அரசாங்கத்துக்கு எதிராக என்பது பற்றி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.
இதேவேளை நாட்டின் தற்போதைய பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்படும் முதல் நம்பிக்கையில்லாப் பிரேரணை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.