
தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் மேலும் 1,353 நபர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த குற்றச்சாட்டுக்காக ஒரே நாளில் அதிகளாவன கைதுகள் பதிவாகியுள்ளமை இது முதல் சந்தர்ப்பமாகும். தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 31,395 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை கொழும்பு பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ட்ரோன் கமரா கண்காணிப்பு நடவடிக்கையின்போது தனிமைப்படுதல் உத்தரவை மீறியமைக்காக நேற்று 09 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அதேநேரம் நேற்று கொழும்பின 14 நுழைவு வாயில்களில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பின்போது 3,615 வாகனங்களில் 5,268 நபர்கள் வருகை தந்துள்ளனர். அவர்களில் 188 பேருக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.