
கொரோனா தொற்று தொடர்பாக போலித் தகவல்களை முகநூலில் வெளியிட்ட இராணுவ அதிகாரி ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை குற்றப் புலனாய்வுப் பிரிவின் கணினி வழியிலான குற்றங்களைத் தடுக்கின்ற பிரிவு நேற்று கைது செய்துள்ளனர்.
கைதானவர் இராணுவத்தின் முன்னாள் அதிகாரி என்பதோடு, 2005ஆம் ஆண்டில் சேவையிலிருந்து ஓய்வுபெற்றிருந்தவர் என விசாரணையில் தெரியவந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை போலிதகவல்கள் வெளியிடுவோர் தொடர்பில் சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென ஏற்கனவே எச்சரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.