
வெண்டைக்காய் வெண்டைக்காய்
பலன் நிறைய உள்ள காய்
எல்லாக் காலமும் கிடைக்கும் காய்
எல்லோரும் உணவில் சேர்ப்போமே.
பச்சை வண்ணக் காய் அது
பச்சையாக உண்ணலாம்
கூர்மையாக இருக்கும் காய்
புத்திக் கூர்மைக்கு நல்லது.
வழவழப்பு அதன் குணம்
உடலுக்கு பளபளப்பு தந்திடும்
சத்து நிறைந்த காய் அது
விரும்பி நாமும் சாப்பிடுவோம்.
இரும்புச் சத்து நார்ச் சத்தென
எல்லாச் சத்தும் இருக்குது
உடம்புக்கு அது நல்லது
உணவில் சேர்த்துக் கொள்வோம்.
நம்ம வீட்டுத் தோட்டத்தில்
போட்டு வைப்போம் சில விதைகளை,
வளர்ந்து பலன் தந்திடும்
பணத்தை மிச்சப் படுத்திடும்.
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.