
சீனாவில் உற்பத்தி செய்யப்படும் 10 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளன.
இன்று காலை 5.10 மணியளவில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் 869 விமானத்தின் மூலம் குறித்த தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதையடுத்து, குறித்த தடுப்பூசிகள், அரச ஒளடதங்கள் கட்டுப்பாட்டு நிறுவகத்திடம் கையளிக்கப்பட்டு, பின்னர், அரச மத்திய ஒளடத களஞ்சியத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன.