எழுதியவர் – சசிகலா திருமால்

கைகேயியின் வரமோ
இராமனின் வனவாசத்துக்கு வழிவகுக்க
குந்தி பெற்ற வரமோ
ஆயுள் முழுவதும்
குற்ற உணர்ச்சியில் போராட…
ம்ஹீம்…
இங்கே வரங்களே சாபங்களானால்
தவங்கள் இயற்றி என்ன பயன்?…
கடுமையான தவங்களியற்றி
வரங்களைப் பெற்ற கர்வமதில்
ஆணவத்தில் ஆடுகையில்
அழிவென்பதுத் திண்ணமே…
ஆசைகள் பேராசையாய்
உரு மாறுகையில்
வரங்கள் சாபங்களே…
ஆம்…
இன்றையத் தொழில்நுட்ப வளர்ச்சியின்
விஸ்வரூப வெற்றியே
நாம் மூச்சுத்திணற
முக்கிய காரணமாகிறது…