1. இருபதாம் நூற்றாண்டு ”இசம்”களிலேயே சுற்றுச்சூழலுக்கு தீமை பயப்பது டூரிசம் தான். – ஆகா கான்
  2. இந்த உலகம் பூச்சிகளின் உலகம் தான். அதில் மனிதரும் வசிக்கின்றனர்.
  3. இயற்கையைப் பராமரிக்க மனிதருக்கு கற்றுக்கொடுக்க ஒரே வழி, அவர்கள் குழந்தையாக இருக்கும் போதே இயற்கையைப் புரிய வைப்பதுதான். – கான்ராட் லாரன்ஸ்
  4. மனிதர்கள் இல்லாமல் பறவைகளால் வாழ்ந்துவிட முடியும். பறவைகள் இல்லாமல் மனிதர்களால் வாழவே முடியாது. – சலீம் அலி.
  5. சிற்றுயிர்களைப் புறக்கணிப்பவன் சிறிது சிறிதாக வீழ்வான். – சாலமோன் ராஜா.
  6. மக்களது நல்லெண்ணமும் ஒத்துழைப்பும் இல்லாமல் வனத்தையோ அல்லது அதில் வாழும் காட்டுயிர்களையோ பாதுகாக்க முடியாது.
  7. ஒரு சந்ததி போகிறது, மறு சந்ததி வருகிறது. பூமியோ என்றென்றைக்குமாக நிலைத்திருக்கிறது.
  8. நம்மில் பலர், புற உலகு என்று ஒன்று இல்லாதது போலவே வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள். – கார்ல் சேகன்.
  9. தாவரவியலைச் செடி, கொடிகள் மூலம்தான் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். புத்தகங்கள் மூலம் அல்ல.
  10. சிவில் இஞ்சினியர்களின் கையில் இந்தியாவின் நீர் மேலாண்மையைக் கொடுப்பது, சில தச்சர்களை விட்டு இதய அறுவை சிகிச்சை செய்ய சொல்வதற்கு ஒப்பாகும். – பிட்டு செகல்
  11. வறுமை தான் உலகை மாசுபடுத்துகிறது. – இந்திராகாந்தி
  12. சாலைகள், ஆக்டோபசின் தும்பிக்கைகள் போல நம் காடுகளுக்குள் நீண்டிருப்பதை நான் வருத்தத்துடன் காண்கிறேன். – உல்லாஸ் கரந்த்

13.பருவநிலை மாறுதல்களின் விளைவை உணர்ந்ததில் நாம்தான் முதல் தலைமுறையாக இருக்கிறோம், அதைச் சரிசெய்யக்கூடிய கடைசித் தலைமுறையாகவும் நாம்தான் இருக்கிறோம். – வாஷிங்டன் மாநில கவர்னர் ஜே இன்ஸ்லீ

  1. சுற்றுச்சூழல் மீது நாம் அக்கறை கொள்வது நமக்காக மட்டுமல்ல, வருங்கால சந்ததிக்காகவும் தான்.
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal