
வௌிநாட்டில் இருந்து பயணிகள் இலங்கைக்கு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், கடந்த 14 நாட்களுக்குள் இந்தியாவுக்குச் சென்ற பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் மேலதிக அறிவிப்பு வரும் வரை தொடரும் என இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் உபாலி தர்மதாச தெரிவித்தார்.
இதேவேளை நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்தததைத் தொடர்ந்து, மே 21 முதல் 31 வரை வௌிநாட்டில் இருந்து பயணிகள் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.