
அன்பு குழந்தையே…
நீ எடுக்கும் முடிவுகளை நிதானத்தோடும் நம்பிக்கையோடும் பிறருக்கு தீங்கு இழைக்காத வண்ணம் எடுக்க வேண்டும்.
தேவைகள் எப்பொழுதும் மாறிக் கொண்டே இருக்கும். முதலில் அந்த எண்ணத்தை சமநிலைப்படுத்து.
அப்போது தான் உன்னால் எதிர்பாராமல் வரும் தாமதங்களையும், தடைகளையும் எதிர் கொள்ள இயலும்.
கஷ்ட நஷ்டங்கள் வாழ்வின் ஒரு பகுதி தான் என்பதை தீர்க்கமாக புரிந்து கொள். அதுவே வாழ்க்கை கிடையாது.
நீ விரும்பும் லட்சியத்தில் வெற்றி கிடைக்கும் வரை ஓயக்கூடாது என்ற உறுதி நெஞ்சில் நிலைத்திருக்க வேண்டும்.
அப்போதுதான் உன்னால் சுடர் விட்டுப் பிரகாசிக்க முடியும். யார் உன்னை என்ன வசைப் பாடினாலும் அது உன்னைத் தீண்டாது.
தீண்டவும் விடமாட்டேன், அதற்க்கான பலனை அவர்கள் சந்திப்பார்கள். தற்போதைய நிலை கண்டு கலங்காதே, நம்பிக்கை இழக்காதே.
கொஞ்சம் பொறுமை காத்து கொள். உனக்கு நல்லதே நடக்கும். முதலில் வாழ்க்கையை நினைத்து பயப்படுவதை நிறுத்து.
பயம் புத்தியை மழுங்க வைத்துவிடும். பயம் எதிர்மறை எண்ணங்களை உருவாக்கும்.
எனவே, எதற்காகவும் பயப்படாதே.
நம்பிக்கையோடும், பொறுமையோடும் நீ உன் கடமைகளை செய் நிச்சயமாக உன்னுடைய இந்நிலை மாறி, வாழ்வில் வெற்றி பெறுவாய்.
உன் வேண்டுதல்கள் பலிக்கும். எல்லா சூழ் நிலைகளிலும் துணை நிற்பேன். என் வார்த் தைகள் மீது நம்பிக்கை வைத்து செயல்படு.
மீதியை நான் பார்த்துக்கொள்கிறேன் நல்லதே நடக்கும். நீ என் பரிபூரண அருளும் ஆசிர்வாதமும் அன்பும் பெற்ற என் பிள்ளை.
ஓம் ஸ்ரீ சாய் ராம் !!?