எழுதியவர் – தம்பலகமம் கவிதா.

உனது பிரிவுதந்த
இடுக்கண்ணை
பொறுக்கமுடியாமல் என்
இருகண்கள் தினமும் கசிவதை சகிக்கமுடியவில்லை
என்னால்.
அன்பு யுத்தத்தின் உச்சத்தில்
அகலக் கால்வைத்து
புறமுதுகிட்டு ஓடிய உன்னை பறக்கணிக்கவே
உந்தன் நினைவுகளை திரட்டி
நெடுந்தூரம் வீசிவிட்டேன்..
என் ஒற்றைத்துளிக்
கண்ணீரின் ஈரக்கசிவில்
வெட்கமின்றி
பற்றிப்படர்கிறது
என் பாலைவனத்தில் உன்
நேசச்செடி..
அலையடிக்கும் கரையினில்
கால்கள் தொடும் கிளிஞ்சல்கள்
உன் நினைவுகளை நீக்கிவிடச்
சொல்லி நெடுநேரமாக
அடம்பிடிக்கிறது..
பெயரிலும் அன்புக்கு அரசி நான்..
பெருந்தன்மையாக விட்டுவிட்டேன்..
பிழைத்துப்போகட்டும்
உன் பெருநினைவுகள்
என்று.!