எழுதியவர் – கோவை_இராஜபுத்திரன்

ஐம்பூதங்களையும் படைத்தவனின்
உயிர்பெற்ற சில புத்தகங்களுக்கு
உணவாக மாறிப்போயின
கடவுளின் வீணாய்போன கவிதைகள்
வாடிய மலருக்கு அஞ்சலி செலுத்த
கிளைவிட்டு கிளைதாவி
அவன் கவிதைகள்
பூத்துக்கொண்டே இருந்தது
நான் சுவைத்து கொண்டிருப்பதில்
கனவில் ஒரு புத்தகம் விரிகிறது
அதில் காண்பதைத் தவிர
கண்டதில் இதுவரை
நான் எழுதியது எதுவுமே கவிதை இல்லை