எழுதியவர் – கதிர் தமிழ்

“வைகாஸ்” என்றால் “மலர்ச்சி” என்று பொருள். இந்த மாதத்திற்கு இன்னுமொரு சிறப்பும் உண்டு.
ஆம் கி.மு.563 இல் இதே மாதத்தில் முழு பௌர்ணமி தினத்தன்று தான் “லும்பினியில்”(இன்றைய நேபால்)
கௌதம சித்தார்த்தன் பிறந்ததாக கருதப்படுகிறது.
அவர் தன்னை புத்தனாக உணர்ந்ததும், தான் இயற்கையோடு தன்னை அர்பணித்து கொண்டதும்(மரணித்த நாள்) இதே மாதத்தில் தான் என்று பலராலும் நம்ப பட்டு வருகிறது.
அன்றைய காலகட்டத்தில் அறியாமையினால் தோன்றும் ஆசைகளினாலும் அதன் மூலமாக மக்கள் பெறும் துன்பங்களிலிருந்து விடுபடவும்.
மக்களுக்கு மக்கள் மொழியிலேயே தனது போதனைகளை செய்து வந்தார் புத்தர்.
அவர் மறைந்தாலும் அவர் விட்டு சென்ற போதனைகளும், கருத்துக்களும் நூற்றாண்டுகள் தாண்டியும் மக்களை ஆண்டது என்பது பலரும் அறிந்ததே.
எல்லா காலகட்டத்திலும் மக்களுக்கு ஏதோ ஒரு பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. இன்றும் மக்களுக்கு ஒரு புத்தன் அல்லது மீட்பர் தேவைப்படுகிறார் என்பது எனது கருத்து.
எது எப்படியோ, இந்த “வைகாசி” மாதத்தில் சில சித்தார்த்தன் கள் பிறந்தாலும் சரிதான்.
பல பேர் தங்களுக்குள் புத்தனை உணர்ந்தாலும் சரிதான்.