கோபிகை

மனக்கல்லறைக்குள்
சொரிந்து கிடக்கிறது
நினைவுப் பூக்கள்
தீண்டப்படாமலே….
ஏதிலியின் கனவுக்கு
ஏது வண்ணங்கள்?
மனவண்டுகளின்
குடைச்சலில்
மக்கிப்போகிறது
மூளை.
மேகத்திரளுக்குள்
ஒளிந்துகொண்ட
நிலவைப்போல
கனவின் கனதிகள்….
அதிக வர்ணங்களோ,
பளிங்கு தூவல்களோ அற்ற
யதார்த்த கனவுகள்
அவை…..
நம்பிக்கை
தொடுவானம்தான்…
ஆனாலும்
கனவுக்குமிழ் வெடித்து
தொட்டுவிடும்
ஒரு நாள்……
கோபிகை….